லிந்துலை – பம்பரகல பகுதியில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைகளுக்காக பம்பரகலை தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் லிதுல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 80 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், அவரது சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குளவி கொட்டுக்கு இலக்கான ஏனைய மூன்று பெண்களும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.