64 மருந்து பொருட்கள் பாவனையில் இருந்து நீக்கம்!

தரமற்றவை என கண்டறியப்பட்ட 64 மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சால் விசேட சுற்று நிரூபம் ஒன்று நேற்று (17.07) வௌியிடப்பட்டது.

அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவுகளிலும் ரத்த அழுத்த நிலையைப் பராமரிக்கவும் பயன்படுத்தப்படும்,   தரம் குறைவாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் Imaepasabe என்ற மருந்தை  உடனடியாக பயன்பாட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதயத் துடிப்பு குறையும் மற்றும் இரத்த அழுத்தம் குறையும் போது இந்த மருந்து அடிக்கடி அவசர மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

இதேபோல், ஆஸ்பிரின்,   பெட்டாடின்,   கோ-அமோக்ஸிக்லாவ்,   மெட்ரோனிடசோல், பைபராசிலின்,   கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளிட்ட 64 மருந்துகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதால் பொதுமக்களின் மருத்துவ தேவைகள் பாதிக்கப்படுவது தொடர்பில் சமூகத்தில் பெரும் விவாதம் இடம்பெற்று வருவதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

Social Share

Leave a Reply