யக்கல – போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் குடியிருப்பில் இருந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பெண்ணின் கணவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து 31 வயதுயைட சதுரிகா மதுஷானி என்ற பெண் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கொலையா, அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையில் சிறிது காலம் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினத்தன்று இரவு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவருடய மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெண்ணின் கணவரிடம் வாக்குமூலம் பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.