கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர எதிர்கட்சி தீர்மானம்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நேற்று (17.07) நடைபெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இதற்கு ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பதவி விலகுமாறு கோரி, சுகாதார அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக இன்று (18.07) காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என சுகாதார அமைச்சர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply