கொழும்பில் இருந்து களனி , விமான நிலைய பெருந்தெரு மற்றும் பேலியகொட பகுதியை இணைக்கும் golden gate Kalyani பாலத்தின் ஆணிகள் மற்றும் கேபிள்கள் களவாடப்பட்டமை குறித்து விசாரணை இடம்பெற்றுவருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (18.07) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும், பாலத்திற்கு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
உண்மையான புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பானின் நிதியுதவியின் கீழ், அவர்களே கட்டித்தந்த இந்த பாலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பாலத்தை தாங்கும் கேபிள்களை தாங்கிக் பிடிக்கும் பெரிய ஆணிகள் மற்றும் செப்புக் கம்பிகள் களவாடப்பட்டுள்ளது. இதன் மொத்தப் பெறுமதி 28 கோடி ரூபாயாகும்.