பொகவந்தலாவ – கொட்டியாகலை பிரிவில், சிறுவர் அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு!

பொகவந்தலாவ கொட்டியாகலை பிரிவில் “சிறுவர்களுக்கான கனவுகள்” என்ற வேலை திட்டத்தின் கீழ் அவர்களின் நலன் கருதி ”நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையம்” அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் திறந்து வைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக உலக வங்கியின் அனுசரனையுடனும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ், நிறுவப்பட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறுவர் அபிவிருத்தி நிலையம், குழந்தைகளின் சுகாதாரம் கல்வி அபிவிருத்தி மற்றும் அவர்களுடைய ஆக்க திறன்களை விருத்தி செய்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் ஜீவன் தொண்டமானுடன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளருமான எம்.ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பிரிவின் தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், உப தலைவர் பிலிப்குமார், போசகர் சிவராஜ், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, தொழிற்சங்க பிரிவின் உதவி தேசிய அமைப்பாளர் பழனி சசிக்குமார், கொட்டகலை மற்றும் நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களான ராஜமணி பிரசாத், ரவி குழந்தைவேல், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள், எனது இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ், பிரத்யேக உதவியாளர் தயாளன் குமாரசுவாமி, கட்சி முக்கியஸ்தர்கள், இளைஞர், யுவதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Social Share

Leave a Reply