இலங்கையில் சடுதியாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

சமீப காலமாக இலங்கையில் தங்கம் ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் (19.07) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உலகளவில் தங்கத்தின் விலை 1977 டொலர்கள் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 25 டொலர்கள் அதிகரிப்பு என தரவுகள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய இலங்கையில் 24 கெரட் பவுன் ஒன்றின் விலை 167,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கெரட் பவுன் ஒன்று 157,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply