வீதி விபத்துக்களில் ஏற்படுத்தும் வாகன சாரதிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து இலங்கை பொலிஸார் பரிசீலித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன ஓட்டுனர்கள் குடிபோதையில் மட்டுமின்றி, சட்டவிரோதமான போதை பொருட்களை பயன்படுத்துவதையும் அவதானிக்க முடிவதாகவும், சட்ட விரோதமான போதை பொருட்களை பயன்படுத்தியதன் பின் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிக்கும் உபகரணங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அவரை தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனையை பொலிஸாரால் உறுதிப்படுத்த முடியும் எனவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 137 பேருந்து விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், ஜூலை 10 ஆம் திகதி வரை 1,135 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.