மட்டக்களப்பிலிருந்து அனுமதிப்பத்திரங்கள் இன்றி வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் பஸ்களை தேடும் நடவடிக்கைகளை பொலிஸார் நேற்று (18.07) முதல் ஆராம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து பொலிஸ் குழுவினர் மட்டக்களப்பு கொழும்பு மற்றும் வெளி மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து பஸ்களை நிறுத்தி சோதனையில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது போக்குவரத்து அனுமதிபத்திரம், சாரதி அனுமதிபத்திரம் உட்பட போக்குவரத்து சேவைக்கான அனைத்து அனுமதி பத்திரங்கள் தொடர்பிலும் பரிசோதிக்கப்பட்டதுடன் வீதி விதிமுறைகளை மீறி பிரயாணித்த சாரதிகள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவொரு அனுமதிப்பத்திரங்களும் இன்றி சட்டவிரோதமாக பொது போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்க இதை சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.