இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியினை பாகிஸ்தான் அணி 4 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 95.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்சய டி சில்வா 122 ஓட்டங்களையும், அஞ்ஜெலோ மத்தியூஸ் 64 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது. இதில் சவுத் ஷகீல் ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களையும், அகா சல்மான் 83 ஓட்டங்களையும், ஷான் மசூத் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்களையும், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்களையும், கசுன் ரஜித, விஷ்வ பெர்னான்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 83.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது. இதில் தனஞ்சய டி சில்வா 82 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 52 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நொமன் அலி, அப்ரார் அஹமட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அகா சல்மான், ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
131 என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 32.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது. இதில் இமாம் உல் ஹக் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.