இன்று மகளிர் உலகக்கிண்ண காற்பந்தாட்ட தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ஆரம்பித்துள்ளது. ஒன்பதாவது மகளிர் உலகக்கிண்ண தொடர் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
32 நாடுகளது அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. 8 குழுக்களில் தலா 4 அணிகள் வீதம் முதற் சுற்றில் மோதுகின்றன. அதன் பின்னர் நொக் அவுட் சுற்று தொடர் ஆரம்பமாகும்.
இன்று நடைபெற்ற முதற் போட்டியில் நியூசிலாந்து அணி நோர்வே அணியை 1-0 என வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா அணி அயர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
நாளையதினம் 03 போட்டிகள் இடம்பெறவுள்ளன.