கஞ்சா பயிரிட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தயார்!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து தயாரிப்புக்கு மட்டும் கஞ்சா பயிர்ச்செய்கையை முன்னெடுக்க அரசாங்கத்தின் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக நேற்று (20.07) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply