உலகில் பால் மாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இலங்கை 05வது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கைக்குத் தேவையான பாலில் 40% மட்டுமே இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஏனைய 60% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (21.07) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பால் மாவை பயன்படுத்துவது ஆரோக்கியமான விடயம் அல்ல எனவும், திரவப் பால் விற்பனையை அதிகரிக்க முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.