இலங்கை மத்திய வங்கி குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
1996ம் ஆண்டு, இலங்கை மத்திய வங்கி மீது குண்டு தாக்குதல் நடத்தி 91 பேரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு குற்றவாளிகளுக்கு கடந்த 18ம் திகதி ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
200 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செல்லையா நவரத்தினம் எனும் நபருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்.சண்முகராஜா என்ற மற்றொரு தமிழீழ விடுதலைப் புலி அங்கத்தினருக்குமே இவ்வாறு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.