ஆசிய வளர்முக அணிகளுக்கான கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் A அணி 128 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடியது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் A அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ரயப் தாகீர் 108 ஓட்டங்களை பெற்றார். ஷகிப்ஷடா பர்கான் 65 ஓட்டங்களையும், சைம் அயூப் 59 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்கள் இருவரது ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 121 ஓட்டங்கள் ஆகும். முபாரிஸ் கான், ரயப் தாகீர் ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்காக 126 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்தியா A அணியின் பந்துவீச்சில் ராஜ்வரதன் ஹஞ்சரேஜ்கர், ரயான் பராக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இந்தியா A அணி 40 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் அபிஷேக் ஷர்மா 61 ஓட்டங்களையும், யாஷ் துள் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சுபியான் முகீம் 3 விக்கெட்களையும், மெஹ்ரான் மும்தாஸ் 2, மொஹமட் வசீம் 02 விக்கட்களையும் கைப்பற்றினார்கள்.