நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பின்புறம் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் 40-45 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், வெள்ளை மற்றும் கறுப்பு நிற கோடுகள் கொண்ட மேலாடை மற்றும் கறுப்பு பாவாடை அணிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.