சூடானில் விபத்தில் சிக்கிய விமானம்- 09 பேர் பலி!

சூடானின் கரையோர நகரமான போர்ட் சூடானில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் நான்கு சூடான் இராணுவ அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த விபத்தில் ஒரு குழந்தை உயிர் பிழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply