வெள்ளவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் ஹீவல்கதுர பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்து இன்று (26.07) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, வேனில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வேன் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.