வெள்ளவாய – கொஸ்லந்த பகுதியில் வேன் விபத்து!

வெள்ளவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் ஹீவல்கதுர பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பாறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று (26.07) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, ​​வேனில் சாரதி மற்றும் நான்கு பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்தில் எவருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

வேன் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version