மால்டோவா 45 ரஷ்ய தூதரக ஊழியர்களை வெளியேற்றியுள்ளது.
சிசினாவில் உள்ள அதன் தூதரகத்தில் ரஷ்யா வைத்திருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மால்டோவா மேற்கொண்டு வருகிறது.
இதன்படி 22 இராஜதந்திரிகள் மற்றும் 23 நிர்வாக ஊழியர்கள் என 45 ஊழியர்களை தற்போது வெளியேற்றியுள்ளது.
மால்டோவாவின் இந்த முடிவிற்கு மொஸ்கோ இணங்குவதற்காக ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா இந்த முடிவின் காரணத்தை ‘அடிப்படையற்றது’ என விவரித்துள்ளார். அத்துடன் மால்டோவாவின் இந்த முடிவிற்கு கிரெம்ளின் பதிலளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.