கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மின் இணைப்பை துண்டித்தமைக்காக இலங்கை மின்சார சபை சிவப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய 339 மில்லியன் ரூபாய் கட்டணம் ஐந்து மாதங்களாக செலுத்தப்படாமையால், மின்சாரத்தை துண்டிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையால் மருத்துவமனையின் செயல்பாட்டில் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் பல சத்திரசிகிச்சை அரங்குகளில் ஏற்கனவே தினமும் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், இயந்திரங்களின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏராளமான நோயாளிகள் காத்திருக்கின்றனர். மின்தடை ஏற்பட்டால், அந்த நோயாளிகள் கடும் ஆபத்திற்கு உள்ளாகுவாகர்கள் என தெரவிக்கப்பட்டுள்ளது.