புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஐந்தில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்தார்.

நேற்று (26.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிக இறப்புகள் பதிவாக இரண்டாவது காரணமாக இருப்பது புற்றுநோய் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதில், பெரும்பாலானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஆண்களிடையே அதிகம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் இந்நோய் அதிகமாக காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் இறப்புகள் தொடர்பான தரவுகளின் அடிப்படையில், 2019ம் ஆண்டில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,599 ஆக பதிவாகியுள்ளதாகவும், இது 2020ம் ஆண்டில் 37,649 எனும் எண்ணிக்கையில் இருமடங்காக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply