இலங்கை நடிகை சாஷ்வி பாலா நடிக்கும் WEB!

வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாகவும், கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள, இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (26.07) காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இலங்கை நடிகை சாஷ்வி பாலா, “ஒரு படத்தின் சந்தைப்படுத்தல் நிகழ்வுக்கு அதில் நடித்த அனைவருமே நிச்சயம் வந்து கலந்து கொள்ள வேண்டும் எனவும், இயக்குனர் ஹாரூண் எல்லா காட்சிகளையும் எனக்கு நடித்துக் காட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் நட்டியுடன் நடிக்கும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் எனவும், தன்னை போன்ற இலங்கை தமிழ் கலைஞர்களுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து வாய்ப்புகள் தந்து ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சுபாஷினி எனும் இயற்பெயர் கொண்ட ஷாஷ்வி, இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக கடமையாற்றியவர் ஆவார். விஜய்யின் பைரவா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஷாஷ்வியின் இலங்கை தமிழை அனைவரும் பாராட்டிய அதேவேளை “தமிழுக்கு நான் அடிமை”என கார்த்திக் ராஜா பபுகழாரம் சூட்டினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version