இலங்கை அணிக்கு மோசமான படு தோல்வி

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்து தொடரை 0-2 என இழந்துள்ளது.

முதல் இன்னிங்ஸ் போன்றே இரண்டாம் இன்னிங்சிலும் மோசமான பொறுப்பற்ற துடுப்பாட்டத்தை வெளிபப்டுத்தி தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் நோமன் அலி முதல் ஆறு விக்கெட்களையும் கைப்பற்றினார். மொத்தமாக அவர் 7 விக்கெட்களை கைப்பற்றினார். நசீம் ஷா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும், டிமுத் கருணாரட்ன 41 ஓட்டங்களையும் நிஷான் மதுஷ்க 33 ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 61 ஓட்டங்களை வழங்கிய போதும் இலங்கை அணி 188 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.

இன்று(27.07) நான்காவது நாள் காலை தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை பாகிஸ்தான் அணி ஆரம்பித்த போதும் சிறிது நேரத்தில் 134 ஓவர்களில் 576 ஓட்டங்களை பெற்று நிறுத்திக் கொண்டது.

இலங்கை அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களான பிரபாத் ஜயசூர்ய, ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் அழுத்தம் வழங்கக்கூடியளவில் பந்துவீசவில்லை. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அப்துல்லா சபிக் தனது முதல் இரட்டை சதத்தை பெற்றுக் கொண்டார். 201 ஓட்டங்களோடு அவர் ஆட்டமிழந்தார். இது அவரின் நான்காவது சதமாகும். ஏழாமிலக்க துடுப்பாட்ட வீரரான அஹா சல்மான் அதிரடியாக துடுப்பாடி சதம் பெற்றுக் கொண்டார். ஆட்டமிழக்காமல் அவர் பெற்றுக் கொண்ட 132 ஓட்டங்கள் அவரின் இரண்டாவது சதமாகும். ஷான் மசூட் 51 ஓட்டங்களையும், சௌட் ஷகீல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாடிய இலங்கை அணியை அபாரமான பந்துவீச்சு மூலமாக தடுமாற வைத்து 48.4 ஓவர்க்ள் 166 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. தனஞ்சய டி சில்வா, டினேஷ் சந்திமால் இருவரும் ஓரளவு நிலைத்து நின்று ஐந்தவாது விக்கெட் இணைப்பாட்டமாக 85 ஓட்டங்களை பகிர்ந்தனர். அதற்கு முன்னர் 36 ஓட்டங்க்ளுக்கு 04 விக்கவெட்களை இழந்தது இலங்கை அணி. டினேஷ் சந்திமால் ஆட்டமிழந்த பின்னர் மேலும் ஒரு ஓட்டத்தில் ஆறாவது விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட அதிரடியாக அடித்தாட முனைந்த தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். டினேஷ் சந்திமால் 34 ஓட்டங்களையும், ரமேஷ் மென்டிஸ் 27 ஓட்டங்களையும் டிமுத் கருணாரட்ன 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முன் வரிசை விக்கெட்களை வேகமாக கைபற்றிக் கொடுத்தனர். அந்த அழுத்தத்தை பாவித்து சகல விக்கெட்களையும் வேகமாக அவர்களால் கைப்பற்ற முடிந்தது.

வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்களையும், ஷகின் ஷா அப்ரிடி ஒரு விக்கெட்டினையும், சுழற்பந்து வீச்சாளர் அப்பார் அஹமட் 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 2 விக்கெட்கள் ரன் அவுட்ட மூலமாக வீழ்த்தப்பட்டன.

இரு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற முதற் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் காணப்படுகிறது.

அணி விபரம்

இலங்கை: 1 திமுத் கருணாரட்ன, 2 நிஷான் மதுஷ்க, 3 குசல் மென்டிஸ், 4 அஞ்சலோ மத்யூஸ், 5 தினேஷ் சந்திமால், 6 தனஞ்சய டி சில்வா, 7 சதீர சமரவிக்ரம (Wk), 8 ரமேஷ் மென்டிஸ், 9 பிரபாத் ஜயசூரிய, 10 அசித்த பெர்னாண்டோ 11 டில்ஷான் மதுசங்க

பாகிஸ்தான் : 1 அப்துல்லா ஷபீக், 2 இமாம்-உல்-ஹக், 3 ஷான் மசூட், 4 பாபர் அசாம் (தலைவர்), 5 சர்பராஸ் அகமட் (WK), 6 சவுத் ஷகீல், 7 அகா சல்மான், 8 நோமன் அலி, 9 நசீம் ஷா, 10 அப்ரார் அகமட், 11 ஷகீன் ஷா அப்ரிடி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version