அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க வங்கி கணக்கு அவசியம்!

சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை வழங்குவதற்கும்  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது  குடியேற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் சமூக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வங்கிக் கணக்கு தொடங்காதவர்களுக்கு உடனடியாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Social Share

Leave a Reply