ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்கில் பில்லியன் கணக்கில் பணப்பறிமாற்றம்!

ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

போதகரின் 11 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த போது இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட பாதிரியாருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply