கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை அழித்த குற்றத்திற்காக பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி வழக்கு தொடர்பாக நீதிமன்றப் பதிவேட்டில் சேர்க்கப்பட்ட இரு ஆவணங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் விசாரணைகளை நடத்தும் பெண் சட்டத்தரணி, வழக்கு தொடர்பான கோப்பிலிருந்து இரண்டு ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்திற்குள் மென்று சாப்பிட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆவண காப்பகத்தில் கடமையாற்றிய நீதிமன்ற அதிகாரிகள் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவித்ததையடுத்து குறித்த பெண் சட்டத்தரணி கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பில் பரிசோதித்தபோது, அவர் மென்று அழித்த ஆவணங்களில் சில துண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கைது செய்யப்பட்ட சட்டத்தரணி இன்று கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.