அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று (29.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைகொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.