இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (01.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

கரையை அண்மித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply