வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வருபவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து விசாரணை நடத்த பொது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிக்கை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டில் பணிபுரிய வரும் இளைஞர்களை பயமுறுத்தி இவர்கள் தலா நூறு இருநூறு டொலர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும், இந்த கும்பலில் குடிவரவு அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கும்பலின் நடவடிக்கையால் கொரியாவுக்கு வந்த இளைஞர்களின் விமானங்கள் கூட சமீப நாட்களாக தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து விரைவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.