உணவு கைத்தொழில் நோக்கத்திற்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று (31.07) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கோழி இறைச்சி இறக்குமதி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (31.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.