இரத்மலானையில் ஆயுர்வேத நிலையம் என்னும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த விபச்சார விடுதியை நேற்று (31.07) சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யபட்ட 08 பெண்களில், விபச்சார விடுதியின் முகாமையாளரும் அதன் சேவைகளுக்கு உதவிய பெண்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் பாணந்துறை, பதவிய, நாரம்பனாவ, பரந்த, கெட்டபுலவ, தம்புத்தேகம, வனாத்தவில்லுவ மற்றும் எல்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 53 வயதுக்குட்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.