கண் சத்திரசிக்சைக்கு பின் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை!

கண் சத்திரசிகிச்சைக்கு பின் பயன்படுத்தப்பட்ட இந்திய மருந்தினால் நோயாளர்கள் பார்வை குறைப்பாடுகளை எதிர்கொண்ட நிலையில், இது குறித்து ஆராய 10 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. 

குறித்த குழு இந்த விடயம் குறித்து ஆராய்ந்து சுகாதார அமைச்சருக்கு அறிக்கை ஒன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குழு உறுப்பினரும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருமான ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க  தெரிவித்துள்ளார். 

இந்த 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று (01.08) நுவெரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்ன தலைமையில் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த குழுவானது, கண்சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்ட சகல நோயாளர்களுடனும் கலந்துரையாடி அவர்களை மேலதிக சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply