தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரர்கள்!

எப்பாவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயதான இளைஞர் ஒருவர் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துசித சம்பத் பண்டார என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காலி பிரதேசத்தில் பணிபுரியும் இடத்திலிருந்து எப்பாவலவில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர் இன்று (02.08) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காலி பிரதேசத்தைச் சேர்ந்த தனது சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் மூன்று சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி குடும்பத்தில் ஐந்தாவது நபராக குறித்த இந்த இளைஞன் இன்று (02.08) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் தலாவ பிரதேசத்தில் அவரது சகோதரர் ஒருவரும் சகோதரி ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் மற்றுமொரு சகோதரன் தோட்டத்திலுள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட அதே அறையில் அவரது மற்றொரு சகோதரர் இதற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதன்படி, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஏழு சகோதர சகோதரிகளில் ஐந்து பேர் அவ்வப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply