மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03.08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ. ஆக இருக்கும் எனவும், கரையை அண்மித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவும், ஏனைய கடற்பரப்புகள் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.