கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் தொழில்நுட்ப நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 5, 6 மற்றும் 7ம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் 77 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு விஜயம் செய்து, பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, பரீட்சை அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply