யாழ் அணி அபார வெற்றி!

Jaffna கிங்ஸ் மற்றும் காலி டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் யாழ் அணி அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

துணித் வெல்லாலகேயின் இந்த அபார பந்து வீச்சு ரகுமான் உள்ளகுர்பசின் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலமாகவும் யாழ் அணிக்கு இந்த இலகு வெற்றி கிடைத்தது. 117 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய யாழ் அணி, 12.4 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ரகுமான் அல்லகுர்பஸ் 54 ஓட்டங்களை தௌகித் ரித்தோய் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும், பெற்றனர். பந்து வீச்சில் ஷகீப் அல் ஹசன் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, 20 ஓவரில் 9 விக்கட்டுகளை இழந்து 117 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப இணைப்பாட்டம் வேகமாகவும் சிறப்பாகவும் இருந்த போதும், முதல் விக்கட் இழப்பினை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்த்தப்பட காலி அணி தடுமாறிப்போனது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் 30 ஓட்டங்களையும், சிவன் டானியல் 25 ஓட்டங்களையும், லசித் குருசேபுள்ளெ 19 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ் அணி சார்பாக துணித் வெல்லாலகே, மிக அபாரமாக பந்து வீசி 10 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். இது அவரது சிறந்த 20/20 பந்து வீச்சாகும், நன்றே பேகர் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலமாக யாழ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version