பெண் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் தலிபான்கள் புதிய சட்டம்!

ஆப்கானிஸ்தானில் வயதுக்கு வந்த சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதை தலிபான் அமைப்பு தடை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சில மாகாணங்களில் பத்து வயதிற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கல்வியை தொடர தடை விதிக்குமாறு தலிபான் அரசாங்கத்தின் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமையிலான ஆட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, 2021 செப்டெம்பரில் பெண்கள் இடைநிலைக் கல்வியை தலிபான் அமைப்பினர் தடைவிதித்திருந்தனர்.

உயர்நிலை கல்வியை தொடர ஆண்களுக்கு மட்டுமே அனுமதியளித்தனர்.

அண்மையில் உடற்பயிற்சி நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்கள், பூங்காக்கள், மற்றும் சந்தைகள் போன்ற பொது இடங்களுக்கு பெண்கள் வெளியில் செல்லும்போது தமது முகங்களை மறைப்பது கட்டாயமாகும் எனவும் தலிபான் அமைப்பு வலியுறுத்தியிருந்து.

இந்நிலையில், தற்போது வயதுக்கு வந்த சிறுமிகள் பாடசாலைக்கு செல்வதற்கு தடை வித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply