135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் அணி 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நான்காவது விக்கெட்டாக டேவிட் மில்லர் ஆட்டமிழந்த பின்னர் மேலும் யாழ் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.
சொஹைப் மலிக், டுனித் வெல்லாளகே ஆகியோர் நிதானமாக இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி இலக்கை நோக்கி போட்டியினை நகர்த்திச்சென்ற வேளையில் ஹசன் அலி டுனித் வெல்லாளகேயின் விக்கெட்டினை கைப்பற்ற போட்டி முழுமையாக தம்புள்ளையின் கைகளுக்கு வெற்றி வாய்ப்பு சென்றது. சொஹைப் மலிக் இறுதி வரை தனித்து நின்று போராடிய போதும் சரியான மறுமுனை உதவியில்லாமையினால் வெற்றி பெற முடியவில்லை.
யாழ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.
தம்புள்ளை அணி சார்பாக ஹசன் அலி ஆரம்பம் முதல் மிகவும் அபாரமாக பந்துவீசி யாழ் அணியினை தடுமாற வைத்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி தடுமாறி போராடக்கூடிய இலக்காக 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. அந்த இலக்கை வெற்றியிலக்காக பந்துவீச்சு மூலம் மாற்றினார்கள்.
றன் அவுட் மூலம் முதல் விக்கெட்டையும், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய குஷல் மென்டிஸின் விக்கெட்டையும் வேகமாக இழந்து தடுமாறிய தம்புள்ளை அணிக்கு குஷல் பெரேரா, சதீர சமரவிக்ரம ஆகியோரது இணைப்பாட்டம் ஓரளவு கைகொடுத்து மீட்டு எடுத்தது. 51 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட மீண்டும் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.
யாழ் அணியில் இன்று இணைந்து கொண்ட சொஹைப் மலிக் சிறப்பாக பந்துவீசினார். மஹீஸ் தீக்ஷனவின் பந்துவீச்சும் ஆரம்பத்திலேயே சிறப்பாக அமைந்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி 6 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்று முதலிடத்தில் தொடர்கிறது.
ரஹ்மனுள்ள குர்பாஸ் | பிடி – | ஹசன் அலி | 03 | 11 | 0 | 0 |
சரித் அஸலங்க | பிடி – ஹேமந்த | ஹசன் அலி | 05 | 09 | 1 | 0 |
தௌஹித் ரிதோய் | பிடி – சதீர சமரவிக்ரம | பினுர பெர்னாண்டோ | 00 | 01 | 0 | 0 |
டேவிட் மில்லர் | பிடி – ஹெய்டன் கெர் | ஹெய்டன் கெர் | 21 | 22 | 3 | 0 |
சொஹைப் மலிக் | 74 | 53 | 5 | 6 | ||
டுனித் வெல்லாளகே | Bowled | ஹசன் அலி | 16 | 17 | 1 | 0 |
திசர பெரேரா | பிடி – அவிஷ்க பெர்னாண்டோ | நூர் அஹமட் | 02 | 05 | 0 | 0 |
விஜயகாந்த் வியாஸ்காந் | Run Out | 02 | 06 | 0 | 0 | |
மஹீஸ் தீக்ஷண | 09 | 11 | 0 | 0 | ||
உதிரிகள் | 12 | |||||
ஓவர் 20 | விக்கெட் 07 | மொத்தம் | 125 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
பினுர பெர்னாண்டோ | 04 | 00 | 08 | 01 |
ஹசன் அலி | 04 | 00 | 20 | 03 |
நூர் அஹமட் | 04 | 00 | 46 | 01 |
ஹெய்டன் கெர் | 04 | 00 | 09 | 01 |
தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 30 | 00 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
அவிஷ்க பெர்னாண்டோ | Run Out | 00 | 01 | 0 | 0 | |
குசல் மென்டிஸ் | பிடி – சொஹைப் மலிக் | மஹீஸ் தீக்ஷண | 00 | 02 | 0 | 0 |
சதீர சமரவிக்ரம | Bowled | டுனித் வெல்லாளகே | 30 | 25 | 4 | 0 |
குசல் பெரேரா | Bowled | சொஹைப் மலிக் | 41 | 36 | 3 | 0 |
தனஞ்சய டி சில்வா | Bowled | சொஹைப் மலிக் | 04 | 09 | 0 | 0 |
அலெக்ஸ் ரோஸ் | Run Out | 05 | 08 | 0 | 0 | |
ஜனித் லியனகே | பிடி – டேவிட் மில்லர் | நுவான் துஷார | 06 | 09 | 0 | 0 |
ஹெய்டன் கெர் | 25 | 20 | 2 | 1 | ||
ஹசன் அலி | பிடி – டேவிட் மில்லர் | நுவான் துஷார | 08 | 08 | 0 | 0 |
நூர் அஹமட் | ||||||
பினுர பெர்னாண்டோ | ||||||
உதிரிகள் | 08 | |||||
ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 134 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மஹீஸ் தீக்ஷண | 04 | 00 | 26 | 01 |
நுவான் துஷார | 04 | 00 | 26 | 02 |
டில்ஷான் மதுசங்க | 03 | 00 | 22 | 00 |
விஜயகாந் வியாஸ்காந் | 02 | 00 | 18 | 00 |
டுனித் வெல்லாளகே | 03 | 00 | 28 | 01 |
சொஹைப் மலிக் | 04 | 00 | 13 | 02 |