தம்புள்ளை ஆதிக்கம் தொடர்கிறது. யாழ் அணி மோசமான தோல்வி.

யாழ் அணிக்கு தோல்வி. தம்புள்ளை அணிக்கு முதலிடம். அடுத்த கட்டத்தை கணிப்பது கடினமான நிலையில்.

135 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ் அணி 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நான்காவது விக்கெட்டாக டேவிட் மில்லர் ஆட்டமிழந்த பின்னர் மேலும் யாழ் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது.

சொஹைப் மலிக், டுனித் வெல்லாளகே ஆகியோர் நிதானமாக இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கி இலக்கை நோக்கி போட்டியினை நகர்த்திச்சென்ற வேளையில் ஹசன் அலி டுனித் வெல்லாளகேயின் விக்கெட்டினை கைப்பற்ற போட்டி முழுமையாக தம்புள்ளையின் கைகளுக்கு வெற்றி வாய்ப்பு சென்றது. சொஹைப் மலிக் இறுதி வரை தனித்து நின்று போராடிய போதும் சரியான மறுமுனை உதவியில்லாமையினால் வெற்றி பெற முடியவில்லை.

யாழ் அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றது.

தம்புள்ளை அணி சார்பாக ஹசன் அலி ஆரம்பம் முதல் மிகவும் அபாரமாக பந்துவீசி யாழ் அணியினை தடுமாற வைத்தார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய தம்புள்ளை அணி தடுமாறி போராடக்கூடிய இலக்காக 20 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்றது. அந்த இலக்கை வெற்றியிலக்காக பந்துவீச்சு மூலம் மாற்றினார்கள்.

றன் அவுட் மூலம் முதல் விக்கெட்டையும், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய குஷல் மென்டிஸின் விக்கெட்டையும் வேகமாக இழந்து தடுமாறிய தம்புள்ளை அணிக்கு குஷல் பெரேரா, சதீர சமரவிக்ரம ஆகியோரது இணைப்பாட்டம் ஓரளவு கைகொடுத்து மீட்டு எடுத்தது. 51 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட மீண்டும் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன.

யாழ் அணியில் இன்று இணைந்து கொண்ட சொஹைப் மலிக் சிறப்பாக பந்துவீசினார். மஹீஸ் தீக்ஷனவின் பந்துவீச்சும் ஆரம்பத்திலேயே சிறப்பாக அமைந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் தம்புள்ளை அணி 6 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்று முதலிடத்தில் தொடர்கிறது.

ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி –ஹசன் அலி031100
சரித் அஸலங்கபிடி – ஹேமந்தஹசன் அலி050910
தௌஹித் ரிதோய்   பிடி – சதீர சமரவிக்ரமபினுர பெர்னாண்டோ000100
டேவிட் மில்லர்பிடி – ஹெய்டன் கெர்ஹெய்டன் கெர்212230
சொஹைப் மலிக்  745356
டுனித் வெல்லாளகேBowledஹசன் அலி161710
திசர பெரேராபிடி – அவிஷ்க பெர்னாண்டோநூர் அஹமட்020500
விஜயகாந்த் வியாஸ்காந்Run Out 020600
மஹீஸ் தீக்ஷண  091100
      
      
உதிரிகள்  12   
ஓவர்  20விக்கெட்  07மொத்தம்125   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
பினுர பெர்னாண்டோ04000801
ஹசன் அலி04002003
நூர் அஹமட்04004601
ஹெய்டன் கெர்04000901
தனஞ்சய டி சில்வா04003000
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
அவிஷ்க பெர்னாண்டோRun Out 000100
குசல் மென்டிஸ்பிடி – சொஹைப் மலிக்மஹீஸ் தீக்ஷண000200
சதீர சமரவிக்ரமBowledடுனித் வெல்லாளகே302540
குசல் பெரேராBowledசொஹைப் மலிக்413630
தனஞ்சய டி சில்வாBowledசொஹைப் மலிக்040900
அலெக்ஸ் ரோஸ்Run Out 050800
ஜனித் லியனகேபிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார060900
ஹெய்டன் கெர்  252021
ஹசன் அலிபிடி – டேவிட் மில்லர்நுவான் துஷார080800
நூர் அஹமட்       
பினுர பெர்னாண்டோ     
உதிரிகள்  08   
ஓவர்  20விக்கெட்  08மொத்தம்134   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்ட விக்
மஹீஸ் தீக்ஷண04002601
நுவான் துஷார04002602
டில்ஷான் மதுசங்க03002200
விஜயகாந் வியாஸ்காந்02001800
டுனித் வெல்லாளகே03002801
சொஹைப் மலிக்04001302

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version