வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வருடாந்த நடைபவனி நிகழ்வு எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு குறித்த பாடசாலையின் பழைய மாணவன் இமயவன் இலங்கையை மோட்டார் சைக்கிளில் சுற்றி வலம் வரும் பயணத்தை இன்று(10.08) ஆரம்பித்துள்ளார்.
இன்று காலை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் அதிபரினால் இந்த மோட்டார் சைக்கிள் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மதியம் 12.45 மணியளவில் கொழும்பை வந்தடைந்த இமயவன் மற்றும் லக்ஸ்மிகரன் ஜோடி காலி வீதியூடாக காலி சென்று தென் மாகாணத்தினூடாக கிழக்கு மாகாணம் சென்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் சென்று மன்னாரூடாக 12 ஆம் திகதி நடை பவனி ஆரம்பிக்கும் வேளையில் நடை பவனியுடன் இணைவார்கள்.
39 மணித்தியாலங்களில் 1450 கிலோ மீட்டர் தூதரத்தை பயணிக்கவுள்ளார். இந்த தூரத்தை ஓய்வின்றி பயணிக்கவுள்ளதாக இமயவன் வி மீடியாவுக்கு கூறினார்.
