தொழிற்சங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் நேற்று (11.08) அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், முதலாளிகளின் பிரச்சினைகள் மற்றும் உத்தேச வரைவுச் சட்டமூலம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தொழிற்சங்க பிரதிநிதிகள் தெளிவற்ற சில சரத்துகளை சரிசெய்வதற்கு தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம், முதலாளிமார் சம்மேளனம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.