மலையக தமிழரின் அபிலாசைகள் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் – மனோ கணேசன்!

நாம் எதிர்கட்சி. ஜனாதிபதி ஆளும்கட்சி.

ஆனால், ஜனாதிபதி ரணில் எனக்கு புதியவரல்ல.

எம்மை 25 ஆண்டுகள் அறிந்தவர். இன்று (12.08) காலை கூட பேசி தெளிவுபடுத்தினார் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இன்று தலவாக்கலையில் நடந்த தமுகூ நடைபயண கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் அவருடன் பேசுவோம். ஆனால் எமது நிகழ்ச்சி நிரலை அவருக்கு அனுப்புவோம்.

எமது குறைந்தபட்ச நிகழ்ச்சி நிரல் இதுதான்.

மலையகத்தில் வீடு கட்டி வாழவும், வாழ்வாதார தொழிலுக்குமான காணி உரிமை, பெருந்தோட்ட குடியிருப்புகளை அரச பொதுநிர்வாக கட்டமைப்புக்குள் கொண்டு வருவது, இந்திய அரசு உறுதியளித்துள்ள இலங்கை ரூ. 300 கோடி நன்கொடை பயன்பாட்டு திட்டம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையிலான நீண்டகால குத்தகை ஒப்பந்தம் மீளாய்வு. இவை தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மலையக தமிழரின் அபிலாசைகள் அடிப்படையிலேயே ஜனாதிபதியுடன் பேசுவோம் - மனோ கணேசன்!

Social Share

Leave a Reply