பெருவில் ஏலியன்களிடம் அடி வாங்கிய மக்கள்!

பெருவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள், ‘ஏழு அடி உயரமுள்ள வேற்றுகிரகவாசிகள்’ தங்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளனர். இது சர்வதேச அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த நபர்கள் குண்டு துளைக்காத கவசம் மற்றும் ஆடைகளை அணிந்திருந்ததாகவும் மக்கள் கூறுகின்றனர். 

ஆனால் அதிகாரிகள் மக்களின் கூற்றை மறுத்துள்ளனர். பொதுவாக பெருவை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கம் அதிகமாக கிடைப்பதாகவும், அதனை சட்டவிரோதமாக அகழ்வதற்காக சில கும்பல்கள் செயற்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சட்டவிரோத கும்பல் மக்களை பயமுறுத்தி அந்தபகுதியில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 

குறிப்பாக  ‘ஏலியன்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் பிரேசிலின் ‘ஓ பிரைமிரோ கமாண்டோ டா கேபிடல்,’ கொலம்பியாவின் ‘கிளான் டெல் கோல்போ,’ ஃபார்க் போன்ற போதைப்பொருள் விற்பனையாளர்களுக்குச் சொந்தமான தங்க மாஃபியாக்களாக இருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

பெருவில் உள்ள நானாய் ஆற்றைச் சுற்றியுள்ள காட்டில் ஆழமான தங்கத்திற்கான வாய்ப்புகளை ஆராய இந்த சட்டவிரோத சுரங்க கார்டெல்களால் ஜெட்பேக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version