அஸ்வெசும திட்டம் தொடர்பில் பெறப்பட்ட ஆட்சேபனைகள் மீதான விசாரணைகள் இன்று (14.08) முதல் ஆரம்பமாகவுள்ளது.
ஆட்சேபனைகளை ஆராய்வதற்கு தேவையான அனைத்து அறிவுறுத்தல்களும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பில் 2 லட்சத்து 17,000 ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்தையும் 5 நாட்களுக்குள் ஆய்வு செய்து இறுதி தீர்மானத்தை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, குறித்த திட்டத்துக்கு எதிராக பெறப்பட்ட எட்டு லட்சம் மேல்முறையீடுகளும் விசாரிக்கப்பட உள்ளதாக நலன்புரி வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த வாரத்திற்குள் பதினைந்து லட்சம் பயனாளிகளுக்கு முதல் கட்ட உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.