ரஷ்யாவின் தெற்குப் பகுதியில் உள்ள தாகெஸ்தானில் உள்ள எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவிலலை எனவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களை மொஸ்கோவிற்கு அழைத்துச் செல்ல சிறப்பு விமானம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வெடிவிபத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ சுமார் 6,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளதாகவும், மேலும் வெடிவிபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.