இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்ட வீரர் வனிந்து ஹசரங்க சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வனிது ஹசரங்க தமது இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் முழுது திறமையையும் வெளிப்படுத்தி இலங்கைக்கு சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இலங்கைக்காக அவர் 04 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், ஒரு துடுப்பாட்ட வீரராக 196 ரன்கள் குவித்துள்ளதுடன், 4 டெஸ்ட் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வனிது ஹசரங்க முதன்முறையாக 2020 ம் ஆண்டு டிசம்பரில் இலங்கையின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார் என்பது விசேடம்சமாகும்.