பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் கொண்டுவரப்படும் பிரேரணைகள் சட்டமாக்கப்படுவதற்கு பல படிநிலைகளை கடக்க வேண்டும் என்றும்,அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று குறித்து மீள கேள்வி எழுப்பும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த சிறப்புரிமை பிரேரணை மற்றும் இது தொடர்பாக சபாநாயகர் வழங்கிய தீர்மானம் தொடர்பில் நேற்று (14.08) ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பிய அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க முடியாது என சபாநாயகர் தெரிவித்திருந்தமையையும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.
இதன் பிரகாரம்,நீதிமன்றங்கள் தேவையில்லை என யாராவது பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால் என்ன நடக்கும் என எரான் விக்கிரமரத்ன இதன் போது கேள்வி எழுப்பினார்.