தொற்றுநீக்கி போத்தல் வைத்திருந்ததால் ஊடகவியலாளரை மைதானத்திற்குள் அனுமதிக்காத பொலிஸ் அதிகாரி!

இன்று (15.08) இரவு (8.15) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற LPL போட்டியில் காலி டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை பதிவு செய்ய சென்ற எமது செய்தியாளர் மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர்களால் சோதனையிடப்பட்டதுடன், மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாது என அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாததன் காரணத்தை எமது செய்தியாளர் பொலிஸ் அதிகாரியிடம் வினவிய போது, ​​ஊடகவியலாளர்கள் தொற்றுநீக்கி போத்தல்களை (Sanitizer Bottle ) எடுத்துச் செல்லக் அனுமதிக்கப்பட கூடாது என மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமக்கு அறிவித்ததாக புகைப்படத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி தொடர்ந்துm தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறான பிரச்சினையை ஊடக நிருபர்கள் இதுவரை எதிர்கொண்டதில்லை என்ற காரணத்தினால், எமது செய்தியாளர் இது தொடர்பில் தொடர்ந்தும் வினவியுள்ளார்.

எமது VMEDIA செய்தியாளர் மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வினவியபோது, அவ்வாறு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ​​மாளிகாவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மைதானத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவ்வாறானதொரு தடையில்லை எனத் தெரிவித்து, எமது செய்தியாளரை மைதானத்திற்குள் செல்ல அனுமதித்துள்ளார். எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டு, எமது செய்தியாளர் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டபோது, போட்டி ஆரம்பித்து சுமார் ஒரு மணி கடந்திருந்தது.

இந்த சம்பவத்தின் போது இலங்கை கிரிக்கெட் அதிகார சபையின் ஊடக முகாமையாளரும் தலையிட்டு, தீர்வு காண உதவியதுடன், இவ்வாறான செயற்பாடுகளை காவல்துறையினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார்.

இவ்வாறு பொலிஸ் அதிகாரி ஒருவர் அசாதாரணமான ஒரு விடயத்தை காரணம் காட்டி ஊடகவியலாளர் ஒருவரை மைதானத்திற்குள் அனுமதிக்காதது ஏன்?

பொறுப்பற்ற காவல்துறை அதிகாரிகளால், ஊடக நிருபர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இத்தகைய அநியாயங்களுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?

Social Share

Leave a Reply