லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதற் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கோல் டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி டைட்டன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்து அபாரமான பந்துவீச்சின் மூலம் கொழும்பு அணியை 74 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது. லஹிரு குமார ஆரம்ப விக்கெட்களை கைப்பற்றிக்கொடுக்க ரப்ரைஸ் ஷம்ஸி மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் ஏனைய விக்கெட்களை பதம் பார்த்தனர்.
தோல்வியடைந்தால் வெளியே என்ற நிலையில் இரு அணிகளும் விளையாடிய நிலையில், கொழும்பு அணியின் போராட்டமின்றிய விளையாட்டு விறு விறுப்பு தன்மையை இல்லாமல் செய்தது.
கொழும்பு அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் நுவனிது பெர்னாண்டோ, லஹிரு உதார ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பாடிய காலி அணி ஓவர்களில் ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். காலி அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட போட்டியின் போக்கு மாற்றமடையும் நிலை ஏற்பட்ட போதும் லசித் க்ரூஸ்புல்லே,ஷகிப் அல் ஹசன் இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி வெற்றியை இலகுபடுத்தினர். 8.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 75 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. இதில் லசித் க்ரூஸ்புல்லே 42 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் காலி அணி இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. கண்டி மற்றும் யாழ் அணிகள் வெளியேற்றும் போட்டியில்(Eliminitaor) 17 ஆம் திகதி இரவு 7.30 இற்கு விளையாடவுள்ளன.
முதல் தெரிவுகாண் போட்டியில் காலி மற்றும் தம்புள்ளை அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி 17 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.